Wednesday, July 28, 2010

நான் ஏன் நாத்திகனானேன்!




கேள்வி கேட்பது தான் எல்லா பதில்களுக்கும் ஆரம்பம்!. தெரியாதது, புரியாதது என பலவகை விசயங்கள் முடிவில் அனைத்தும் கடவுள் செயல் என கைவிடப்படுகின்றன! மனித நாகரிகம் ஆறாயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாக அறியப்படுகிறது, சிந்து சமவெளிநாகரிகம், கிரேக்க நாகரிகம், மாயன், இன்கா என அனைத்தும் ஆறாயிரம் வருடங்களுக்கு உட்பட்டதே! ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் படிமங்கள் லட்சகணக்கான வருடங்களாக மனிதனின் முன்னோர்கள் பூமியில் வாழ்ந்து வந்திருப்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. மனிதனின் முன்னோர்களான நியாண்டர்தால், ஹோமோஎரக்டஸ் போன்ற உயிரினங்களை மதம் அடியோடு மறுக்கிறது, ஆனால் இவைகள் இல்லாமல் இன்று மனிதனை பற்றி அறிவியல் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்!



ஒவியகலை, கட்டிடக்கலைக்கு முன்னோடி போர்கலை அதை மனிதன் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போதே பழகிவிட்டான், கூட்டம் கூட்டமாக வாழப்பழகிய மனிதன் தனக்கென ஒரு நகரத்தை உருவாக்கினான், கிடைத்திருக்கும் நாகரிக படிமங்கள் அவனது காலனி வாழ்க்கைக்கு ஆதாரம், அவைகளின் வளர்ச்சி கட்டிடகலை வளர்ச்சியாக முன்னேறியது, பிரமிக்கவைக்கும் பிரமீடுகள், ஒவ்வொரு நாகரிகத்திற்கும் தனிபட்ட அடையாள கட்டிடங்கள் என மனித நாகரிகம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தது. ஆனால் கி.பி 1600 வரை மனிதன் அறிவியலில் பல விசயங்கள் புரியாமல் தான் இருந்தான். 2000 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டையானது, பூமி சூரியனை சுற்றி வருகிறது என சந்திரனில் விழும் நிழலை வைத்து கண்டறிய முடிந்த மனிதனுக்கு அவையெல்லாம் ஏன், அதன் இயக்கம் எப்படி என்பது புரியாத புதிர், அவைகளுகெல்லாம் அவன் வைத்த பெயர் தான் கடவுள்!



ஆனால் அறிவியல் தாகம் நின்றுவிடவில்லை, எதையும் கேள்வி கேட்டு கொண்டே தான் இருந்தது, முயற்சியில் மனம் தளராத சிலரால் சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டு, சூரியனின் ஆற்றலில் பிரமித்து பூமியிலும் ஆற்றலை உருவாக்க நினைத்தார்கள், யோசித்து பாருங்கள் 5000 வருட மனித நாகரிகத்தில் மின்சாரம், கடைசி 400 வருடங்களுக்குள் தான் கண்டுபிடிக்கப்பட்டது, ஏதேன் தோட்டத்தில் மனிதனை படைத்த கடவுள் அப்போதே ஏன் அவனுக்கு அனைத்து அறிவுகளையும் கொடுக்கவில்லை, ”மனிதன்” அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றால் எனக்கு அடிமையாக இருக்க விருப்பமில்லை, நானாகவே அறிவு பெற்றேன் என்றால் எனக்கு கடவுள் தேவையில்லை!


இந்த உலகில் இருக்கும் அதிகாரமுள்ள கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து, சீக்கியம், பெளத்தம், சமணம் மதங்களிடயே கொள்கை முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் பல உண்டு, ஆனால் அனைத்திற்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்ன தெரியுமா!? இவை அனைத்தும் ஆசிய கண்டத்திலேயே உருவானவை! ஆபிரகாம மதங்கள் மத்திய கிழக்கு ஆசியாவிலும்!. இந்து, சமணம், பெளத்தம், சீக்கியம் இந்தியா மற்றும் இந்தியாவிற்கு அருகிலும்!. ஏன் இப்படி, மற்ற நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா!? அவர்கள் மேல் ஏன் கடவுளுக்கு அக்கறையில்லை, இன்றும் அந்தமான் தீவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில பழங்குடியினருக்கு இத்தனை மதங்கள் இருப்பதே தெரியாது, அதே போல் தான் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கும்!


பூமியில் உயிரினத்தின் பரிணாமத்திற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன, மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து பின் பிரிந்து சென்றான் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது, மனித இனத்திற்குள்ளாகவே தோற்ற பிரிவு! ஒரு தாய்மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகள் அதை நிருபிக்கும். கடவுளின் இருப்பு எங்கேயும் இல்லை, கடவுள் என்ற ஒன்று உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையும் இல்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலிருந்தே தெரிகிறது, ஆனாலும் மதவாதிகளிடம் விவாதிக்கும் போது, ஆதியில் இருந்த ஓரணுவுக்கு வருவார்கள், அதை படைத்தது யார் என்பார்கள்! அவர்களால் கடவுள் இல்லை என்றால் ஜீரணிக்க முடியாது, ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!, 4000 வருடங்களாக இருந்த பல புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது போல், இதையும் கண்டுபிடிக்க முடியும்! அதற்கு தடையாக இருக்கும் கடவுளை சற்றே ஒதுக்கி வைத்தால் தான்!

ஆகையால் நான் நாத்தியகானவே இருக்கிறேன்!

குறுந்தகவல்

1)

“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

2)
ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3)
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

4)
மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

5)
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

6)
தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

7)
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


8)
முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9)
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்படி?


10)
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

11)
சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

12)
நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

13)
நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?

* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

14)
வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே போயிருமே...!

சோதிடம்

மனிதன் நாகரிக வளர்ச்சி பெற்றாலும் அவனுக்கு புரியாத புதிராக இருந்தது, இயற்கை சீற்றங்களும், மாறுதல்களும். ஒரு பகல்,ஒரு இரவு சேர்ந்து ஒருநாள் என கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாறுதல்களுக்கும் ஆகும் கால அளவை அவர்கள் குறித்து வைத்திருந்தனர்!,அவர்களுக்கு மனிதர்களின் வருங்காலத்தையோ, குணாநலன்களையோ தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதும் இருந்ததில்லை, ஆனால் பின்னாள் வந்த சில பொறம்போக்குகள், அனைவருக்கும் பொருந்துவது போல் சில பலன்களை எழுதி காசு சம்பாரிப்பது மட்டும் அல்லாமல், அதை பயன்படுத்தி எப்போதும் மக்கள் சுயசிந்தனையில்லாமல் வாழ செய்து விட்டார்கள்!



நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ஒவ்வொன்றிற்கும் நம்பர் கொடுத்து, பத்து துண்டு சீட்டில் நம்பர் எழுதி யாரைவாது எடுக்க சொல்வேன், அந்த நம்பருக்குண்டான பலன் அப்படியே பொருந்துகிறது என்பார்கள், அதை பல பேரிடம் நான் சோதித்திருக்கிறேன், கிட்டத்தட்ட கிளி சோதிடம் மாதிரி தான், யாராவது மறுமுறை சோதித்திருந்தால் அந்த பலனும் பொருந்தியிருக்கும், அவர்களும் எப்படியென்று கேள்வி கேட்டிருப்பார்கள், ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!
எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு...................

பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் இல்லையா, சோதிடம் என்றால் என்னவென்று தெரிந்த பகுத்தறிவுவாதி இதை துவைத்து காயப்போடுவான்!, உங்களுக்கு ராகுதிசை நடக்கும் அதனால் நல்லது நடக்கலாம், நடக்கலையா இன்னும் உள்ளே போங்கள் கேது புத்தி அதற்கு கெட்டது, அதற்கும் ஒன்னும் ஆகலையா என்ன ஹோரை என்று பாருங்கள், ஆக உங்களுக்கு இருக்கும் மூன்று ஆப்ஷனுக்கு எதாவது ஒன்றில் பலன் வருவது போல் திறைமையான ஒருவனால் அல்லது, வளரும் கேள்விகளுக்கேற்ப பலரால் மாற்றம் செய்யபட்டு உருவாக்கப்பட்டதே சோதிடம் என்னும் டுபாக்கூர்!
(சின்ன இடைச்சொருகல்:இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாலேயே இப்படி ஒன்றை உருவாக்கி இருக்கும் போது, அதற்கு பின் வந்த மக்கள் ஏன் பைபிள், குரான் போன்ற புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியாது)

12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான், இந்த உலகில் ஒரே குணநலனுடன் யாரும் பிறப்பதில்லை, கோபம், சந்தோசம், அழுகை, இரக்கம் போன்ற அனைத்தும் கலந்தது தான் மனிதன், அவைகளின் கலவை தான் சோதிடம், இதை மிக எளிதாக புரிந்து கொள்லலாமே, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாள், இரும்பு தொழில் செய், எண்னை தொழில் செய்யுன்னு எழுதிட்டு போயிட்டாங்க, அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!

Sunday, July 25, 2010

குறுந்தகவலகள்

SMS

இந்த முறையும் எல்லாம் கலந்த குறுந்தகவல் கலவைகள் உங்களுக்காக‌


பேசாத வார்த்தையை விட, பார்க்காத கண்களை விட, நினைத்துக்கொண்டிருக்கும் இதயத்திற்கு வலி அதிகம்

உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன், ஏன் தெரியுமா? உன்னை துடிக்க விட்டு வாழ எனக்கு விருப்பம் இல்லை. (கொஞ்சம் ஓவராத்தான் போயிடுச்சோ!)

உன் மனம் நோகும் போது சிரி. பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை. ‍ சார்லி சாப்ளின்

நண்பனுக்கும் அம்மாவுக்கும் என்ன வித்தியாசம். நண்பன்: கடவுள் கொடுத்த பரிசு. அம்மா: பரிசாக வந்த கடவுள்

அன்பில் நீங்க ஒரு பிரிட்டானியா
அறிவில் நீங்க பார்லிஜி
பொறுமையில் நீங்க மில்க் பிக்கிஸ்
வேகத்தில் நீங்க 50 50
பண்பில் நீங்க லிட்டில் ஹார்ட்ஸ்
மொத்தத்தில் நீங்க ஒரு பிஸ்கோத்து

ஆசிரியர்: அணுவின் அமைப்பை பற்றி கூறு.
மாணவன்: அனு வின் கண்ணம் ஆப்பிள். அவள் உதடு செர்ரி. மொத்தத்தில் அனு ஒரு சூப்பர் ஃபிகர்

ஜேம்ஸ் பாண்டு இந்தியர் ஒருவரை சந்திக்கிறார்.
பாண்டு: மை நேம் இஸ் பாண்ட், ஜேம்ஸ் பாண்ட்
இந்தியன்: மை நேம் இஸ் நாயுடு, வெங்கட நாயுடு, சிவ வெங்கட நாயுடு, லட்சுமி நாராயண சிவ வெங்கட நாயுடு, சீனிவாசலு லட்சுமி நாராயண சிவ வெங்கட நாயுடு, ராஜ சேகர சீனிவாசலு லட்சுமி நாராயண சிவ வெங்கட நாயுடு
பாண்ட்: தெரியாம சொல்லிட்டேன் விட்ருப்பா.

அவள் கோவிலை சுற்றினால் பக்தியோடு, நான் அவளை சுற்றினேன் காதலோடு, அவள் அப்பன் என்னை சுற்றினான் அருவாளோடு.

மெளனம் என்ற மொழியின் விளைவுகள்.
இன்பமான நேரத்தில் மெளனம் சம்மதம். நேசத்தவர்கள் பிரியும் போது மெளனம் சித்திரவதை. காதலில் மெளனம் துன்பம். தோல்வியில் மெளனம் சாதனை படி. வெற்றியில் மெளனம் அடக்கம். இறுதியில் மெளனம் மரணம்.

தீவிரவாதிகளை மன்னிப்பதோ, தண்டிப்பதோ கடவுளின் முடிவு. அவர்களை கடவுளிடன் அனுப்பும் வேலையை மட்டும் நாங்கள் செய்கிறோம். இந்தியன் ஆர்மி


நீண்ட நாட்களாக எனக்கு வந்த குறுந்தகவல்களை சேர்த்து வைத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நல்லாருந்தா நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தட்டிவிடுங்க. பழசு, புதுசு, கடி, ரொமான்ஸ் எல்லாமே இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------------------------------
மேனேஜர்: எங்க பேங்க்ல இன்ட்ரஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்
சர்தார்: கொடுக்குறதை கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாமே, ஏன் இன்ட்ரஸ்ட் இல்லாம கொடுக்குறீங்க

பருத்தி வீரன் வசனம்
நானும் பாத்துகிட்டே இருக்கேன், பயபுள்ள ஒரு மெசேஜ் கூட அனுப்பாம ஓட்ட மொபைல வச்சிகிட்டு என்ன பண்ற! போ போ, வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா ரீசார்ஜ் பண்ணச்சொல்லி மெசேஜ் அனுப்பு. போ போ. சொல்றோம்ல

லவ் பண்ண LUCK வேணும்
பிசினஸ் பண்ண MONEY வேணும்
அரசியல் பண்ண தில் வேணும்
அன்பு காட்ட அம்மா வேணும்
எஸ்.எம்.எஸ் அனுப்பு என்னை மாதிரி நல்ல ஃப்ரண்ட் வேணும்

நொடிக்கணக்கில் மெளனம்
நிமிட கணக்கில் சிரிப்பு
மணிக்கணக்கில் அரட்டை
காலந்தோறும் இன்பம்
இதெல்லாம் நம் நட்பில் தான்

உயிர் பிரிவது ஒரு நொடி வலி.
ஒரு நல்ல நண்பனின் மெளனம் ஒவ்வொரு நொடியும் வலி.

அவளை நான் நேசிக்கவில்லை, சுவாசிக்கிறேன். வாழ்த்து சொல்ல அவள் என் வாழ்க்கையில் வந்தவள் இல்லை
வாழ்க்கையை தந்தவள். அவள் என் அன்னை.

கவலை இல்லாத மனிதர்கள் இருவர் மட்டுமே
ஒருவர் இறந்துவிட்டார், இன்னொருவர் இன்னும் பிறக்கவேயில்லை

நிலவுக்கும் ஒரு நாள் விடுமுறை உண்டு
ஆனால் என்னில் உன் நினைவுகளுக்கு என்றும் விடுமுறை இல்லை

நீ இல்லை என்றால் நான் இல்லை என்பது காதல்.
யார் இல்லையென்றாலும் உனக்காக நான் இருப்பேன் என்பது நட்பு

மனைவி: பக்கத்து வீட்டுக்காரி எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா?
கணவன்: 5 வருசத்துல இப்பதான் என்னோட செலக்ஷன் நல்லாருக்குன்னு சொல்லியிருக்க

எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட எப்போது சந்திப்போம் என்று இதயம் துடிப்பதே உண்மையான நட்பு

அன்புடன் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட, உரிமையோடு பேசும் ஒரு வார்த்தையில் இருப்பதுதான் உண்மையான அன்பு

பிரிவு என்பது யாராலும் மறுக்க முடியாத வலி. நினைவு என்பது யாராலும் திருட முடியாத பொக்கிஷம்.


பீச் மணல்ல வீடு கட்டிவிளையாடினதோட அருமை,
ஃபிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்


கவிதை: தலை குனிந்து உன்னை படித்தேன். இன்று பலர் என்னை தலைநிமிர்ந்து பார்க்கச்செய்தாய் - "புத்தகம்"

காதல் என்பது call மாதிரி. வரும்போதே அட்டண்ட் பண்ணனும், இல்லைன்னா மிஸ்டு call ஆகிடும். நட்பு SMS மாதிரி. அட்டண்ட் பண்ணலைன்னாலும் inbox-ல இருக்கும்


கண்ணீரைத்துடைக்க உன்னைப்போல் நண்பன் இருந்தால், விஜய் படம் கூட தைரியமாய் பார்ப்பேன்.

உன்னோடு நான் பேசிய நாட்கள் போதும்
நம் இருவரும் இனி பார்க்கவே வேண்டாம்
நீ யாரோ, நான் யாரோ என்று பிரிந்து விடுவோம்
உனக்கும் எனக்கும் இனி எந்த உறவும் இல்லை
நான் உன்னுடன் இருந்த நாட்களை நீ மறந்து விடு
பை, இப்படிக்கு
உன் கவலைகளும், துன்பங்களும்.

இழப்பதற்கு ஒன்றுமில்லை
ஆனால் ஜெய்ப்பதற்கு உலகமே இருக்கிறது - கீதை.


பேருந்து படிக்கட்டில் பயணம் , வகுப்பறை வரை நீளும் கேளிக்கள் ,

நடு இரவில் சென்று பார்த்த தேர்வு முடிவுகள்

இரவு வரை தொடர்ந்த கிரிக்கெட்

நண்பனுக்காக சென்ற காதல் தூது

தேர்வு நேரத்தில் விடியல் வரை நீளும் படிப்பு

சொல்லமலே முடிந்த காதல்கள்

ஒரே தட்டில் பத்து பேர் உண்ட உணவு

தன்மானம் காக்க போட்ட டிப்பார்ட்மெண்ட் சண்டைகள்

கல்லூரியின் இறுதி நாளன்று சிந்திய கண்ணீர்

கல்லூரி கூட கருவறை தான்

பிரசவிக்காமலையே இருந்திருக்கலாம்.

*******************************************************



வாழ்க்கை செல்போன் மாதிரி

அதுல ப்ரண்ட்ஸ் சார்ஜ் மாதிரி

காதல் ரீசார்ஜ் மாதிரி

என்னதான் ரீசார்ஜ் பண்ணாலும்

சார்ஜ் இல்லைண்ணா, சுவிட்ச் ஆப் தான்


*******************************************************
வாழ்வது ஒருமுறைதான் என்றாலும் வாழ்த்தட்டும் தலைமுறை - அன்னை தெரசா



ஒருநாள் நிச்சியம் விடியும், அது உன்னால் மட்டுமே முடியும் - அப்துல்கலாம்


*******************************************************


பூமியில் பூப்பது எல்லாம் பூவென்றால், உன் புன்னகையை என்னவென்று சொல்வது


*******************************************************
புன்னைகை என்ற முகவரி இருந்தால், நண்பர்கள் என்ற கடிதங்கள் எளிதில் வந்தடையும்.

அவள் என்னை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்,அவள் என்னை கொஞ்சும் போது சொல்ல நினைக்கிறேன்,அவள் என்னை முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்,ஆனால் சொல்ல முடியவில்லை அம்மா என்றுகடவுளே சீக்கிரம் எனக்கு பேச அருள் புரிவாயாக-ஒரு மாதக்குழந்தை
-------------------------------------------------------------------------------------
நண்பனையும் நேசி, எதிரியையும் நேசிநண்பன் உன் வெற்றிக்கு துணையிருப்பான்எதிரி உன் வெற்றிக்கு காரணமாயிருப்பான்
============================================================
ஜப்பான் மொழியில் "சின் சா சூ"சீன மொழியில் "சின் பாங் பூ"ஹவாய் மொழியில் "ஹூ லூ லூ"ஜெர்மன் மொழியில் "பேங்க் புபூ"தமிழில் "லூசாப்பா நீ"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு தடவை ஒரு எலி ஒரு பெரிய பூனை கிட்ட மாட்டிக்கிச்சி. அந்த எலி சொல்லுச்சி, பூனை அண்ணே நான் எங்அ அப்ப அம்மாவுக்கு ஒரே பையன் என்ன சாப்பிடாதீங்க. அதுக்கு அந்த பூனை என்ன சொல்லுச்சி தெரியுமா?

"மியாவ்"... கதை கேக்குற வயசா இது? போ போ போய் வேலையப்பாரு.

###############################################################
சில உறவுகள் புன்னகையை போல, எப்போதாவது நினைவு வரும். சில உறவுகள் மூச்சு மாதிரி எப்பவும் கூடவே இருக்கும். "உன்னை மாதிரி".
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வேதனை சுமக்க இதயமுண்டுகண்ணீரை வடிக்க கண்கள் உண்டுகடமை முடிக்க கைகள் உண்டுஎன்றும் உன்னை நினைக்க நான் உண்டு
************************************************************************
உன் சந்தோசத்தைக்கொண்டாட திரும்பிப்பார், உன் சொந்தங்கள் 100 பேர் நிர்ப்பார்கள். உன் சோகத்தை பகிர்ந்து கொள்ள திரும்பிப்பார் நான் மட்டும் நிற்பேன், மிலிட்டரி சறக்கோடு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய். ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய்
`````````````````````````````````````````````````````````````````````````````````
எதை நீ அதிகம் விரும்புகிறாயோ அதை நீ விரைவில் வெறுப்பாய் - கீதைஎதை நீ வெறுக்கிறாயோ அதை நீ விரைவில் விறும்புவாய் - பைபிள்எதையும் அதிகம் நேசிக்கவும் கூடாது, எதையும் அதிகம் வெறுக்கவும் கூடாது - குறான்
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
நண்பன்1: பேங்க்ல லோன் போட்டு டியூ கட்டாதனால பைக்க தூக்கிட்டு போய்ட்டாங்க
நண்பன்2: அய்யோ இது தெரிஞ்சிருந்தா நான் கல்யாணத்துக்கு லோன் போட்டிருப்பேனே!

பெண்: டாக்டர் என்னோட வீட்டுக்காரர் 1 லிட்டர் பெட்ரோல் குடிச்சிட்டார். டாக்டர்: 60கிலோமீட்டர் ஓடச்சொல்லுங்க சரியாப்போயிடும்.

/////////////////////////////////////////////////////////


நபர்1: சார் உங்க வீராச்சாமி படம் மூலமா எங்களுக்கு நல்ல வசூல்சார் டி.ஆர்: நீங்க எந்த தியேட்டர் முதலாளி நபர்1: நான் அமிர்தாஞ்சன் கம்பெனி முதலாளிங்க.

-------------------------------------------------------------------

பில்கேட்ஸ்: ஏழையாகுறதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன் நண்பர்: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் செய்யுங்க பில்கேட்ஸ்: நான் ஏழையாகுறதுக்கு வழி கேட்டேன், பிச்சைக்காரன் ஆகுறதுக்கில்லை.

=================================================

ஐஸ்வர்யாராய் மரத்துக்குகீழ இருந்து கோக் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. மரத்துமேல இருந்து அப்பா எறும்பும், மகன் எறும்பும் பாத்துக்கிட்டு இருந்து. மகன் எறும்பு தவறி கோக் பாட்டிலுக்குள்ள விழுந்திருச்சி. அப்பா எறும்பு வந்து ஐஸ் கிட்ட ஒரு மேட்டர் சொன்னது ஐஸ் அரண்டுட்டாங்க, அது என்ன?


என் பையன் இப்ப உன் வயத்துல.

#################################################

பெண்1: இந்த புடவை எப்படி இருக்கு?
பெண்2: நல்லாருக்கு. புடவை எடுத்ததை உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லிட்டியா?
பெண்1: கடைக்காரன் கிட்டயே சொல்லலை.
பெண்2: ???

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நாய்க்கு பிடித்தது எலும்பு குரங்குக்கு பிடித்தது வாழைப்பழம் யானைக்கு பிடித்தது கரும்பு எறும்புக்கு பிடித்தது இனிப்பு மாட்டுக்கு பிடித்தது உன்னை ஏன் தெரியுமா? புரியலையா? புண்ணாக்கு புண்ணாக்கு...

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

உன்னை என்னில் இருந்து பிரிக்கும் இந்த இரவை பார்க்கக்கூடாதென்று காலை வரை கண்மூடி இருக்கப்போகிறேன்.

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு குட்நைட் சொல்ல....

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அமைச்சர்: மன்னா போருக்கு போகும் போது ஏன் கவசம் போடுறீங்க
மன்னன்: கவசம் போடலைன்னா, தெவசம் போட்டிருவாங்கடா.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஆறுல அஞ்சு போனா என்னா வரும்
அஞ்சுவோட டெட்பாடி வரும், ஏன்னா அஞ்சுவுக்கு நீந்த தெரியாது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிரிவை தாங்க முடியவில்லை, தயவு செய்து பேசாதே
-உதடு

காதலில் கண்களின் அசைவுகளுக்கு ஆயிரம் அர்த்தம் இருக்கும்.
ஆனால் நட்புக்குள் கண்களின் அசைவுகளுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்
"மச்சி அந்த ஃபிகரை பாருடா"

அழும் போது தனியாக அழு. சிரிக்கும் போது நண்பர்களோடு சிரி. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள் - கண்ணதாசன்

இராமாயணத்துல இராவணனுக்கு 20 கண்ணு, ஆனா அவன் ஒரு பொண்ணைதான் பார்த்தான்.
உனக்கு 2 கண்ணு, ஒரு நாளைக்கு 20 பொண்ணை பாக்குற, யாரு பெரிய கேடி?

பையன்: அப்பா ஓவரா என்னை பக்கத்து வீட்டு பொண்ணோட கம்பேர் பண்ணீல பாரு அவ 470 மார்க், நான் 480 மார்க்.
அப்பா: லூசு, அவ 10-ம் வகுப்பு, நீ 12-ம் வகுப்புடா

மண்டை உடையாம இருக்க ஹெல்மெட் போடலாம், ஆனா ஹெல்மெட் உடையாம இருக்க மண்டைய போடமுடியுமா?
- இவண், ஹெல்மெட் போடாமல் போலீஸுக்கு டிமிக்கு கொடுக்கும் சங்கம்

அரசன்: அமைச்சரே, போரில் எதிரி படைகள் ஒடிய ஓட்டத்தை நினைத்தால் சிரிப்பு வருகிறது.
அமைச்சர்: ஆம் மன்னா, எவ்வளவு ஓடியும் அவர்களால் நம்மை புடிக்கவே முடியவில்லை.

நண்பன்1: நான் என்ன செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்க நிக்குறாடா
நண்பன்2: கார் ஓட்டிப்பாரேன்

என்னை வெல்வதற்கு யாருமில்லை உன் அன்பைத்தவிற
என்னை கொல்வதற்கு யாருமில்லை உன் பிரிவைத்தவிற

அவள் மூச்சுக்காற்றே உன் மூச்சுக்காற்று
அவள் இதய துடிப்பே உன் இதய துடிப்பு
அவள் அன்பே என்றும் மாறாத அன்பு
-அம்மா

உன்னை நான் என் இதயமென்று சொல்லமாட்டேன், ஏனென்றால் நீ துடித்து
நான் உயிர் வாழ விரும்பவில்லை.


இலவசம்


இலவசம்


இலவசம்

ஒரு புக் வாங்கினா, ஒரு கார் இலவசம்.

அப்படியா?

என்ன புக்?


"R.C. புக் "

-----------------------------

நோயாளி - டாக்டர் நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணனும்.
மருத்துவர் = நான் ஆபரேஷன் தான் பண்ணுவேன், காரியமெல்லாம் உங்க வீட்டில் உள்ளவங்கதான் செய்யனும்.

-----------------------------

"பயணங்கள் முடிவதில்லை"
"அலைகள் ஓய்வதில்லை"
"கோபுரங்கள் சாய்வதில்லை"
"நீங்கள் மெஷேஜ் அனுப்புவதில்லை"
"நானும் விடப்போவதில்லை"

----------------------------

மனைவி: ராத்திரி நீங்க ஏன் சிரிச்சீங்க?
கணவன்: கனவுல அசின் வந்தா.
மனைவி: அப்புறமா ஏன் கத்துனீங்க?
கணவன்: கொஞ்சம் நேரம் ஆன பிறகு நீ வந்துட்ட.

-----------------------------

மனிதன்1: சார் ஜீவன்தாரா பாலிசி இருக்கு, எடுத்துக்குறீங்களா?
மனிதன்2: நயன்தாரா இருந்தா சொல்லுங்க எடுத்துக்குறேன்.

-----------------------------

நான் ஒரு ஓவியன். ஆனால் உங்கலை வரைய முடியவில்லை.
ஏன் தெரியுமா, ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்.

--------------------------------

இன்றைய சூப்பர் பஞ்ச்
SMS அனுப்பி உங்க இன்பாக்ஸை நிரப்புவது எனது விருப்பமல்ல
அன்பால் உங்கள் இதயத்தை நிரப்புவதே என் விருப்பம்.

--------------------------------

மத்தவங்களுக்கு நட்பு ஒரு sms மெசேஜ் - மட்டும் இருக்கலாம்.
ஆனா நம்ம நட்பு மத்தவங்களுக்கு ஒரு மெசேஜா இருக்கட்டும்.


---------------------------------

மனைவி: ஏன் உங்களுக்கு ராணினு ஒரு வொய்ப் இருக்குறதா சொல்லலை.
கணவன்: நாந்தான் உன்னை "ராணி" மாதிரி வெச்சிக்கிறேன்னு சொன்னேன்ல.

---------------------------------

நீ அழுதால் அழுவதற்கும், நீ சிரித்தால் சிரிப்பதற்கும் கண்ணாடி மட்டுமல்ல, நானும் இருக்கிறேன்.

---------------------------------

அதிகமா படித்தவர்கள் இருமலுக்கு மருந்து வாங்க மாட்டாங்க.
ஏன்னா, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் "சிரப்'பு

கருவறையை விட்டு கீழே இறங்கி கல்லறை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை.

ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் விண்ணில் இருந்தாலும் இரவுக்கு அழகு நிலவுதான். ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு நட்புதான்.

ரோடுல போற பொண்ணைப்பார்த்தா பொறுக்கின்னு சொல்றாங்க. ஆனா வீட்டுல போய் பொண்ணைப்பார்த்தா மாப்பிள்ளைன்னு சொல்றாங்க. என்ன சமுதாயங்க இது!!!

லேட்டஸ்ட் திருக்குறள்
பீடியால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே
பிராந்தியால் வெந்த வயிறு

மழைக்கு அழத்தான் தெரியும், சிரிக்கத்தெரியாது. சூரியனுக்கு எரிக்கத்தான் தெரியும் அணைக்கத்தெரியாது. எனக்கு நினைக்கத்தான் தெரியும், மறக்கத்தெரியாது.

பீர் பொங்குவது போல் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும். சிகரெட் புகைபோல் உன் புகழ் பரவட்டும். பான் பராக் சுவை போல் என்றும் உன் வாழ்க்கை இனிக்கட்டும்.

அந்தக்கறை, இந்தக்கறை எந்தக்கறையா இருந்தாலும், சர்ப் எக்ஸல் போட்டா போயிடும். போகாத ஒரே ஒரு கறை, அது நான் உங்கமேல வச்சிருக்க அக்கரை.

இன்று மியூசிக் காலேஞ்க்கு விடுமுறை. என்னவளின் கொலுசு தொலைந்ததால்.


விடிய விடிய கவிதை எழுதி பார்க்கிறேன்! ஆனாலும் உங்கள் பெயரைப்போல இல்லை।(நண்பர்களுக்கு ஐஸ் வைக்கும் சங்கம்)


நிஜங்களை விட நினைவுகள் தான் இனிமையானவை.நிஜம் என்பது சில நிமிடம் தான். ஆனால் நினைவுகள் என்றும் நிறந்தரம்.

தோல்வியடையும் போது தைரியமாய் இரு. வெற்றியடையும் போது அமைதியாய் இரு. - சுவாமி விவேகானந்தர்.

வெற்றி என்பது பெற்றுக்கொள்வது. தோல்வி என்பது கற்றுக்கொள்வது. முதலில் கற்றுக்கொள்வோம். பின் பெற்றுக்கொள்வோம்

அமைதியான இரவு, அம்சமான நிலவு, ஆர்பரிக்கும் நட்சத்திரங்கள் அசர
வைக்கும் ஃபேன் காத்தில் அசந்து தூங்க உங்களுக்கு என் அடக்கமான இரவு வணக்கம்.


தாயின் வலி நமக்கு தெரிவதால் தான் அழுகின்றோம் நாம் பிறக்கும் போது.
(பாசக்கார பய புள்ளைக சங்கம்).

சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்ம்மா இருகுரவங்அலுக்கு சும்மா சும்மா மெஜெஸ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவங்க சும்மா சும்மா மெஜேஸ் அனுப்புறவங்களை சும்மா விட்டு வைக்க மாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்கறவங்களுக்கு சும்மா இந்த மெஜேஜை பார்வேர்டு பண்ணுங்க. இல்லைன்னா சும்மா இருங்க

என்னதான் பெரிய பக்திமானா இருந்தாலும் கப்பல் கிளம்புறதுக்கும் முன்னாடி எழுமிச்சம்பழம் வைக்க முடியாது.