நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ஒவ்வொன்றிற்கும் நம்பர் கொடுத்து, பத்து துண்டு சீட்டில் நம்பர் எழுதி யாரைவாது எடுக்க சொல்வேன், அந்த நம்பருக்குண்டான பலன் அப்படியே பொருந்துகிறது என்பார்கள், அதை பல பேரிடம் நான் சோதித்திருக்கிறேன், கிட்டத்தட்ட கிளி சோதிடம் மாதிரி தான், யாராவது மறுமுறை சோதித்திருந்தால் அந்த பலனும் பொருந்தியிருக்கும், அவர்களும் எப்படியென்று கேள்வி கேட்டிருப்பார்கள், ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!
எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு...................
பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் இல்லையா, சோதிடம் என்றால் என்னவென்று தெரிந்த பகுத்தறிவுவாதி இதை துவைத்து காயப்போடுவான்!, உங்களுக்கு ராகுதிசை நடக்கும் அதனால் நல்லது நடக்கலாம், நடக்கலையா இன்னும் உள்ளே போங்கள் கேது புத்தி அதற்கு கெட்டது, அதற்கும் ஒன்னும் ஆகலையா என்ன ஹோரை என்று பாருங்கள், ஆக உங்களுக்கு இருக்கும் மூன்று ஆப்ஷனுக்கு எதாவது ஒன்றில் பலன் வருவது போல் திறைமையான ஒருவனால் அல்லது, வளரும் கேள்விகளுக்கேற்ப பலரால் மாற்றம் செய்யபட்டு உருவாக்கப்பட்டதே சோதிடம் என்னும் டுபாக்கூர்!
(சின்ன இடைச்சொருகல்:இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாலேயே இப்படி ஒன்றை உருவாக்கி இருக்கும் போது, அதற்கு பின் வந்த மக்கள் ஏன் பைபிள், குரான் போன்ற புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியாது)
12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான், இந்த உலகில் ஒரே குணநலனுடன் யாரும் பிறப்பதில்லை, கோபம், சந்தோசம், அழுகை, இரக்கம் போன்ற அனைத்தும் கலந்தது தான் மனிதன், அவைகளின் கலவை தான் சோதிடம், இதை மிக எளிதாக புரிந்து கொள்லலாமே, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாள், இரும்பு தொழில் செய், எண்னை தொழில் செய்யுன்னு எழுதிட்டு போயிட்டாங்க, அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!
No comments:
Post a Comment